Tuesday, December 16, 2008

பொருளாதார நெருக்கடியும் பழைமைவாத அரசியல்வாதிகளும்

எனவே இது தான் சூழ்நிலை: பொருளாதாரம் பல தசாப்தங்கள் கண்டிராத மோசமானதொரு சரிவை எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதார தாழ்வு நிலையை எதிர்கொள்வதற்கான வழக்கமான பதிலிறுப்புகளான வட்டி விகிதங்களைக் குறைப்பது போன்றவை எல்லாம் பலனளிப்பதாக இல்லை. பெரிய அளவிலான அரசாங்க உதவி என்பது தான் பொருளாதார பல்டியைத் தடுப்பதற்கான ஒரே வழியாகத் தோன்றுகிறது. அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால், வழக்கமான பழைமைவாத அரசியல்வாதிகள் வழக்கொழிந்த தங்களது சித்தாந்தங்களுடன் நடவடிக்கையின் வழியில் குறுக்கே நிற்கிறார்கள்.

இப்படி தொடங்குகிறது நோபல் வென்ற பால் கிரக்மேனின் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை. ஜேர்மனி ஒரு நாடு பொருளாதார மீட்பு தொகுப்பில் நம்பிக்கை இல்லாமல் பேசுவதும் நடந்து கொள்வதும் எப்படி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா அல்லது உலகில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற சில நாடுகளின் இந்த 'ஊக்கத்தொகுப்பு மூலம் மீட்சி' முயற்சியையும் அது எப்படி பலனில்லாது ஆக்கும் என்பதை விளக்குவதற்காக இப்படி ஆரம்பிக்கிறார் அவர்.

http://www.deccanchronicle.com/Columnists/Columnists.asp#Time%20is%20running%20out%20for%20Europe

செய்தித்தாளின் இன்னொரு பக்கத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பதற்காக இந்திய வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை 8.5 சதவீதம் முதல் 9 சதவீதத்திற்குள் என்பதாக குறைத்திருப்பதாக செய்தி.

வெறும் மேம்போக்கான ஒப்பீட்டை வைத்து இதை ஒரு குறையாகக் காணும் அளவுக்கு நாம் பொருளாதார வல்லுநர் இல்லை தான். ஆனாலும் நாம் வேண்டுவதெல்லாம், ஐயா அதிகாரத்தில் இருக்கும் தொரைகளே, லோகத்தில் நாலு இடத்தில் நடப்பதைப் பார்த்து, கோடிக்கணக்கான சாதாரண மக்களின் நலன்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுங்கள். இரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா சொல்வதைப் போல, "டாக்டர், என்னை வைச்சு தான் நீங்க தொழில் கத்துக்கறீங்க போலிருக்கு" என்பதாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து பொருளாதார அல்லது அரசியல் மேதைகளான உங்களின் அறிவை அல்லது நிர்வாக திறனை புலப்படுத்தும் முனைப்பில் இறங்கி விடாதீர்கள் என்பது தான். 'டாக்டர்' சிங்குக்கும் 'டாக்டர்' சோனியாவுக்கும் மற்றும் நம் பிற பழமைவாத அரசியல்வாதிகளுக்கும் கேட்குமா?

No comments: