ராசியில்லாத புதிய உடை : சுனில் கவாஸ்கர்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது "டுவென்டி-20' போட்டியிலும் இந்திய அணி கோட்டைவிட்டதால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னதாக நீல நிறத்தில் உடையணிந்த இந்திய வீரர்கள் வெற்றி மழையில் நனைந்தனர். தற் போது கருநீல உடைக்கு மாறியுள்ள தோனியின் இளம் படை தோல்விகளை சந்தித்து வருகிறது. இது "உடை ராசி' பற்றி ஆலோசிக்கச் செய்துள்ளது. இந்த புதிய உடை ராசியில்லாததாக இருக்குமோ என ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது. தவிர இலங்கை மற்றும் இங்கிலாந்து வீரர்களும் இதே நிறத்தில் உடையணிந்து விளையாடுவதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே மீண்டும் இந்திய அணி நீல நிற உடை அணிந்து களமிறங்கலாம் என நினைக்கிறேன்.
-தினமலர் செய்தி
அட பதருங்களா, கலர் ராசி உங்களையும் விட்டு வைக்கலயாடா? பச்சைக்கும் மஞ்சளுக்கும் நடுவில மாட்டிக்கிட்டு இம்சை தாங்க முடியாம தானடா இளைஞர்கள் உங்ககிட்டே வர்றோம், இங்கேயும் இதே தொல்லையாடா?
ஏன்டா, ஜெயிக்கும் போது பிட்சை ரீட் பண்ணோம், பவுலரை வாட்ச் பண்ணோம்னும் சொல்றீங்க, தோத்தா மட்டும் ஏண்டா பழியை எவன் மேலயாவது தூக்கிப் போடறீங்க. உங்களத் திருத்தவே முடியாதாடா?
(விவேக் பாணியில் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment